2015/07/24

பாடல் பெற்ற பதிவர்


தேவியர் இல்லம் பதிவில் தினவாழ்வின்
மேவுமிடர் ஆய்ந்திடுவார் ஜோதிஜி - ஆவலிந்த
மின்னூல் மகராசன் டாலர் நகரம்போல்
இன்னும் எழுதவேண்டு மென்று.




    மேல்தட்டுச் சமூகச் சிந்தனை, அடித்தட்டுச் சமூக அக்கறை, தீவிரப் பொதுநோக்கம், பாமரச் சிக்கல்களின் ஆழறிவு, முன்னேற்றத்துக்கான மெய்க்கவலை, வணிக நாணயத்தின் இருபுறப் பார்வை, தனித்தமிழ் வீச்சு, எழுத்தாளுமை - வேறு சூழலில், காலக்கட்டத்தில் எங்கள் நட்பு நேரிட்டிருந்தால் தமிழக அரசியலில் மாற்று அமைப்புகள் வேரிட்டிருக்கும் கடுஞ்சாத்தியத் தொலைக்கனவைத் தன் எண்ண வெளிப்பாடுகளில் அடிக்கடி முன்னிறுத்தும் இலட்சியப்பதிவர் ஜோதிஜி.

எதையும் அக்கறையுடன் எழுதும் இவரின் படைப்பு நேர்மை பிரமிக்க வைக்கிறது. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். பதிவர்கள் தங்களைப் பற்றிக் குறிப்பெழுத 'ப்லாகர்' அனுமதிக்கிறது. ஜோதிஜி தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கும் விதம் - இதுவரை படித்திராதவர்கள் கைவேலைகளைத் துறந்து உடனே படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும்.

இவரது வலைப்பூ libertarian intellectual கள் பானை. உள்ளே இறங்கிவிட்டால் போதை தலைக்கேறும் வரை பதிவுகளைப் புரட்டிக்கொண்டே இருக்கத் தோன்றும். எப்போதாவது எழுதும் சமூக வரலாற்றுக் குறிப்புகள் ஊறுகாய் போல. [நாடார்களின் தோற்றம் பற்றியப் பதிவு சுவாரசியமானது. நாடார்களை உருவாக்கியவர் peeping tom இந்திரனாம்.]

இவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் தகவல் சுரங்கம்.





அடுத்து பாடல் பெறும் பதிவர்: சூரி என்கிற சுப்புத்தாத்தா.

முன்னர்:

கீதா சாம்பசிவம்
பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி


17 கருத்துகள்:

  1. ஜோதிஜி அண்ணா மிகச் சிறந்த எழுத்தாளர்... அருமையாக எழுதுவார்...
    பாடல் பெற்ற பதிவராய்... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சுருக்கமான ஆயினும்
    அழுத்தமான அறிமுகம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. லட்சியப்பதிவர் ஜோதிஜி அண்ணனுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. முழுக்க முழுக்க சமூக சிந்தையுடன் எழுதும் பதிவர்களில் முதன்மையானவர்

    பதிலளிநீக்கு
  5. ஓரிரு முறை சென்றிருக்கிறேன் துளசி கோபால் இவரைப் பற்றி எழுதி இருந்தார்

    பதிலளிநீக்கு
  6. குமார் எழுதியிருந்தார். தனபாலன் இணைப்பு கொடுத்து இருந்தார். அதன் பிறகே உங்கள் அங்கீகாரம் தெரியவந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //இவரது வலைப்பூ libertarian intellectual கள் பானை. உள்ளே இறங்கிவிட்டால் போதை தலைக்கேறும் வரை பதிவுகளைப் புரட்டிக்கொண்டே இருக்கத் தோன்றும்//

    வடமொழியில் ஒரு ஸ்லோகம் அதாவது பதிகம் ஒன்று உள்ளது.

    யஸ்ய நைசர்கிகி ஷோபா தன்ன சம்ஸ்காரம் அர்ஹதி.
    கஹா கலாம் சசிநோமார்ஷ்டி குச்தபஹா தேன ரஜ்யதெ .

    பொதுவாக இதற்குப் பொருள் சொன்னால்,

    எதற்கெல்லாம் இயற்கையாகவே அழகும் பொலிவும் உண்டோ அதற்கெல்லாம் செயற்கையான ஆபரணங்கள் தேவையில்லை.
    சந்திரனுக்கு அழகும் கௌச்துப ரத்தினத்திற்கு அங்கீகாரம் தேவையோ ?

    ஜோதி என்றாலே ஒளி
    ஜி என்றால் ஜீவித்திருக்கும் எல்லாமே.

    He did not touch what he did not adore

    எனச் சொல்வதுண்டு ஆங்கில கவிஞர் கீட்சைப் பற்றி.

    இவர் கை உளி பட்ட கல் எல்லாமே கஜுராஹோ ஆகிறது.

    காண்போரை வியக்க வைக்கிறது.



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  8. The sloka in the second line of my comment should read as:
    kaha kalaam shasthinor maashti kausthubaha kena rajyathe.

    That which is naturally beautiful needs no artificial illumination.
    No recognition is ever needed as they
    stand on their luminescence

    subbu thatha.

    பதிலளிநீக்கு
  9. ** பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.** எனும் போதும் என்னைப் போலும் கத்துக்குட்டி இங்கே கருத்திட்ட துணிந்ததற்கு மன்னியுங்கள்:) ஜோதிஜி அண்ணாவை பற்றியும், அவரது பதிவுகளை பற்றியும் நான் நினைப்பதையே கண்ணாடியாக காட்டுகிறது பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள் ஜோதிஜி சார்...

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையான பதிவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். நான் அதிகம் படித்ததில்லை எனினும் அவரின் பின்னூட்டங்கள் வாயிலாக அறிவேன். நீங்கள் சொன்னதை விடவும் மேலான ஒரு லட்சியப் பதிவர். வாழ்த்துகள் அவருக்கும், அவரைப் பாராட்டிக் கவிதை புனைந்த உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  12. உண்மையிலேயே பாடல் பெற வேண்டிய பதிவர் தான் திரு ஜோதிஜி. பளிச் பளிச்சென்று தன் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதிவிடுவார். எழுத்துக்களில் கனல் பறக்கும். சிலபேர்களால் மட்டுமே அந்த சூட்டைத் தாங்க முடியும். சிறப்பாக ஜோதிஜியை கௌரவித்திருக்கிறீர்கள். அவரது எழுத்தை ரசிக்கும் ரசிகை என்ற வகையில் உங்களுக்கு எனது நன்றி.
    சுப்புத் தாத்தாவின் பாடல்கள் (பிறர் எழுதியதை இசை அமைத்துப் பாடுவார்) என்றுமே ரசிக்கத் தகுந்தவை. அடுத்த பதிவில் அவரைப் பற்றி எழுதப் போகிறீர்களா?

    பதிலளிநீக்கு
  13. இணைய நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.
    https://www.facebook.com/ERA.MURUKAN/posts/1003610849662548?pnref=story -ல் குறிப்பிடப்படுபவர் நம் காஸ்யபன் அவர்கள்தானே ?

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவரைப் பற்றி...அவர் பாடல் பெறத் தகுதி பெற்றவரே! முழுமையாக....அவரது பதிவுகள் அனைத்தும் தகவல் பொக்கிஷம். நேர்மை மிளிரும். அவர் எழுதுவதைப் போல வாழ்பவர் என்பது தெள்ளத் தெளிவு. அவரது தோற்றம் அதைச் சொல்லுகின்றது. பொறிபறக்க எழுதுபவர். பளிச்! அந்த வெளிச்சத்தைப் பார்த்தால் சிலருக்குக் கூசலாம் கண் திறக்க முடியாமல்....அவரைப் பற்றி அறிய அவரது எழுத்துகளை வாசித்தாலே அறிந்துவிடலாம். சிலரது எழுத்துகள் வேறு எழுதுபவரைப் பார்க்கும் போது எழுத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்காது. ஆனால் நண்பர் ஜோதிஜி அப்படி அல்ல...இரண்டும் ஒருவரே என்பது தெளிவு..

    நீங்கள் சொல்லி இருப்பது அனைத்தும் மிக மிகச் சரியே! உங்கள் பாடலும் மிக அருமை! நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு எங்கல் மனமார்ந்த வாழ்த்துகள்! அவரைப் பற்றி எழுதிய உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  15. அட அடுத்து சுப்புத்தாத்தா....அருமையான தாத்தா! அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  16. படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். சுப்புத் தாத்தாவை தங்கள் வரிகளில் காணக் காத்திருக்கோம்.

    பதிலளிநீக்கு