2012/01/01

புத்தாண்டில் பத்து





அனைவருக்கும் புத்தாண்டில் அறிவும் அமைதியும் கிடைக்கட்டும்.

இந்த வருடம், மாதம் ஒரு முறையாவது பறிக்க வேண்டிய வலைப்பூக்கள் பத்து:

மின்மினிப்பூச்சிகள்: கடவுள், இலக்கியம், சமூகம் இவற்றின் பின்னணியில் சற்றே அறிவை உரசிப் பார்க்கவைக்கும் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுகிறார். இவருக்குப் பிடித்தப் புத்தகம், சோவின் 'எங்கே பிராமணன்?' என்று நினைக்கிறேன் :). நம் வாழ்வின் கணங்களை மின்மினிப்பூச்சிகளின் ஒளிவீச்சுக்கு ஒப்பிடும் Shakthiprabhaவின் எழுத்துக்களில், சமீபத்தில் ரசித்தப் பதிவு: அகல் கூறும் கதைகள்.

நாடி நாடி நரசிங்கா: ஒரு சோம்பலான ஞாயிறு மதியம், இணையத்தில் எதையோ தேடப்போய் இவர் பதிவில் இறங்கிச் சிலிர்த்தேன். தமிழ்வேதம் எனும் திவ்வியப்பிரபந்தத்தை சுவையான சிறு பக்கவிவரங்களுடன் அழகாக எடுத்தெழுதுகிறார் Rajesh. எங்கிருந்து படங்களைப் பிடிக்கிறார் என்று ஒவ்வொரு முறையும் வியக்கிறேன். சமீபத்தில் ரசித்தப் பதிவு: 'மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயானை' பாடலின் விளக்கம்.

கிணற்றுத் தவளை: நம்ப முடியாத அளவுக்கு தமிழ்ச் சினிமா பாடல்களின் தொகுப்பு. காலவரையென்றிலாத rangeல் பாடல்களைத் தொகுத்து வழங்குகிறார் Asokaraj. மறந்து போன எத்தனையோ பாடல்களை நினைவுக்கு கொண்டு வந்தவரை அவ்வப்போது நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

வீடு திரும்பல்: அரசியல் சினிமா சமூகம் என்றுப் பரவலாக அலசி அழகாக எழுதும் சுஜாதா விசிறி. சமீபத்தில் ரசித்தப் பதிவு: 'வாங்க முன்னேறி பார்க்கலாம்'. சென்னை அறிமுகத்தைச் சுவாரசியமான கவிதையாகச் சொல்லியிருக்கிறார். (ஹ்ம்ம்ம். i miss madras):
'ஏகமான கூட்டத்தில் மூச்சுத் திணறி 
  மூர்ச்சையானது என் கவிதை'. 

மனதோடு மட்டும்...: பெண்ணியம், தாம்பத்தியம், ஒழுக்கம், விழிப்புணர்ச்சி என்று அனாயாசமாக பல தட்டுக்களில் பரிமாறுகிறார் கௌசல்யா. எழுத்திலும் எண்ணங்களிலும் தெரியும் துணிச்சல், இதமாகவும் இருக்கிறது. சமீபத்தில் ரசித்தப் பதிவு: 'மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன?!'

சித்திரவீதிக்காரன்: தமிழ்மண நட்சத்திரமாக இவர் ஒளிவீசியபோது அறிமுகம். நல்ல கட்டுரைகள் அழகு தமிழில். மதுரைக்காரனென்றப் பெருமை பதிவுகளில் தெரிகிறது. சமீபத்தில் ரசித்தப் பதிவு: 'கதவைத்திற காற்றுவரட்டும்'.

கன்னம்: யோவ் என்ற வித்தியாசமான பெயரில் வித்தியாசமான கவிதைகள் எழுதுகிறார். 'கவிதைக்காக எதையும் இழக்கலாம் என்று தீர்மானித்துவிட்டேன்' என்னும் இவர் எழுதியவற்றுள், நான் சமீபத்தில் ரசித்த ஒரு எளிமையானக் கவிதை:
'சவரமும் சேர்த்தே செய்துகொண்டால்
  பத்து ரூபாய் குறையும் என்பதால்
    பெரும்பாலும் தாடியை வருடியே
      தீர்மானிக்கப்படுகிறது
        முடிவெட்டுகிற நாட்கள்..!'

Consent to be......nothing!: தமிழ்த்தளம் தான் :) opinionated அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் பார்வை. விவரம் தெரியாமல் நிறைய பேர் எழுதுகிறார்கள் (மி). விவரம் தெரிந்து நிறைய பேர் எழுதுகிறார்கள். இந்த வலைப்பூ இரண்டாவது வகை. காரசாரமான தலையங்கம். அரசியல் சமூகப் பார்வைகளில் நடுநிலை கவைக்குதவாது என்ற கொள்கையோடு எழுதுகிறார். நடுநிலை விளையாட்டு ரெபரீக்களுக்கு, பொதுமக்களுக்கு அல்ல என்றே நானும் நம்புகிறேன். இவர் கட்டுரைகளை ஆழ்ந்து படிக்க வேண்டும். படித்தால், காரசாரத்தின் பின்னே கண்கெட்டிருக்கும் பொதுஜனத்தின் மேலுள்ள கரிசனம் லேசாக எட்டிப் பார்ப்பது புரியும். பின்னூட்டமிடக் கொஞ்சம் தைரியம் வேண்டும் :). சும்மா ஏதாவது எழுதினால் கிழித்து விடுகிறார் கிருஷ்ணமூர்த்தி, கவனம். சமீபத்தில் படித்து ரசித்தவை: 'வெள்ளின்னா' 'சன்டேன்னா' பதிவுகள்.

எண்ணிய முடிதல் வேண்டும்: எதையோ தேடி ஏதோ ஒரு ப்லாகில் இறங்கி, திடுக்கிட்டு மலைத்து, இருப்பது அத்தனையும் படிக்கத் தோன்றிய அனுபவம் உண்டா? அப்படிச் சமீபத்தில் அறிமுகமான வலைப்பூக்களில் ஒன்று. இவருடைய சவால் போட்டிச் சிறுகதையை மிகவும் ரசித்தேன். மில்ஸ் & பூன் பற்றிய இவருடைய பழைய பதிவைப் படித்த போது, 'டப்பா புக்' என்று உயர்நிலைப்பள்ளியில் உடன் படித்த பெண்களைக் கிண்டல் செய்த நினைவுகள் வந்தன. அகலமான கேன்வஸ் இவருடையது. தேடத் தேட நிறையக் கிடைக்கிறது. நிறைய படித்து ரசித்தப் பதிவு: 'கோதை-செவ்வாய்-FRENCH KISS!'. (ஹிஹி.. இவர் பதிவுல இறங்கின காரணம் புரிஞ்சுடுச்சா?)

நித்திலம்: விவரமாக நிறைய எழுதும் பதிவர்களில் ஒருவர். 'பவளசங்கரி' என்று வரும் பதிவுகள் சுவையாக இருக்கின்றன. ('பவள சங்கரி' புரியவில்லை:). இடையிடையே அருமையான இலக்கியத் தமிழ்ப் பதிவுகள் எழுதுகிறார். வல்லமை மின்னிதழின் நிர்வாக ஆசிரியர் என்பதை இதை எழுதும் பொழுது தெரிந்து கொண்டேன் :). தொடர்கதை எழுதுவது எளிதேயல்ல. சென்ற மார்ச் மாதத்திலிருந்து 'வெண்ணிலவில் ஒரு கருமுகில்' என்று ஒரு கதையைத் தொடர்ந்து எழுதிவருகிறார். பிரமிக்க வைக்கும் உழைப்பு. சமீபத்தில் படித்து ரசித்தது: 'SMS எம்டன்' புத்தக விமர்சனம்.


    ழுதி முடித்த பிறகே இந்தத் தளத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. (நன்றி: R கோபி ராமமூர்த்தி).

நேசம்: இயக்கத்தின் பெயரே இழுக்கிறது. புற்றுநோய் விழிப்புணர்ச்சி பற்றிய வலைப்பூ மாதிரி இருக்கிறது. வளர்ந்தால் புரியும். விழிப்புணர்ச்சி உண்டாக்க ஒரு போட்டியுடன் தொடங்கியிருக்கிறார்கள் புத்தாண்டை. உடன்படும் யுடான்ஸ் குழுவினரோ, ஏதாவது செய்து பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இது நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.


34 கருத்துகள்:

  1. ஷைலஜா அக்கா, தோழி ஷக்திப்ப்ரபா, நண்பர் அசோக்ராஜ் மற்றும் வீடு திரும்பல் எனக்கு அறிமுகமானவர்கள். மற்றவர்களின் தளம் நான் பார்த்திராதது. அதுவும் நாலாயிரத்துக்கு விளக்கம் எழுதுகிறார் என்றால்... அந்த அழகுத் தமிழை ரசிக்க உடனே பார்த்து விடுகிறேன். அறிமுகங்களுக்கு நன்றி ஸார்!

    பதிலளிநீக்கு
  2. அடடா சாதரணமாய் தான் உங்களின் இந்த பதிவை ஓபன் செய்தேன். பத்து பதிவில் எனது ப்ளாக் பெயரும் பார்த்து
    அசந்து போனேன் !! மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்களின் எழுத்து (குறிப்பாக சிறுகதைகள்) மற்றும் ரசனை குறித்து நான் மட்டுமல்ல பலரும் மிக அதிக அளவு மதிப்பு வைத்துள்ளதை பதிவர் நண்பர்களுடன் பேசும் போது அறிந்துள்ளேன். தாங்கள் இடும் பின்னூட்டங்கள் குறித்தே கடைசியாய் ஒரு சந்திப்பில் பத்து நிமிடம் பேசி கொண்டிருந்தோம் !! உங்களிடமிருந்து இந்த அங்கீகாரம் வந்தது நிச்சயம் நிறைய எழுத உந்துதலாய் இருக்கும். மிக நன்றி

    பதிலளிநீக்கு
  3. புதிய தளங்கள் சிலவற்றின் அருமையான அறிமுகங்களுக்கு நன்றி,,

    பதிலளிநீக்கு
  4. சில தளங்களை தவிர மற்றவை எனக்கு புதிது. வாசித்தேன். உங்களை கவர்ந்தவை எங்களை கவராமல் போகுமா?

    பதிலளிநீக்கு
  5. மோகன்குமார் எங்கூர்க்காரர். சுயமுன்னேற்றக் கட்டுரைகள் புனைபவர்.

    நாடி நாடி நரசிங்கா.. சூப்பர்ப் அறிமுகம்.


    யோவ்வின் நிறைய கவிதைகள் பெயரைப்போலவே தட்டிக் கூப்பிட்டு ஆழமான சங்கதிகளை சொல்கிறது.


    மிக்க நன்றி. 2013-லாவது உங்களது பத்தில் இடம்பெறுவேனா என்று பார்க்கலாம் ஜி!

    பதிலளிநீக்கு
  6. அவர்களை பற்றி தெரியவில்லை நீங்க அறிமுகப்படித்திய விதம் அருமை

    பதிலளிநீக்கு
  7. அப்பாதுரை அவர்களுக்கு சித்திரவீதிக்காரனின் நெஞ்சார்ந்த நன்றி. என்னுடைய தளத்தையும் பத்து தளங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்து நல்ல அறிமுகம் கொடுத்ததற்கு நன்றி. என்றும் அன்புடன் சித்திரவீதிக்காரன்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான அ(ரி)றிமுகங்கள்..

    பதிலளிநீக்கு
  9. இருசிலர் எனக்கும் அறிமுகமானவர்கள்.கன்னம் யோவ் பக்கங்கள் மிகவும் பிடிக்கும் !

    பதிலளிநீக்கு
  10. அன்பின் திரு அப்பாதுரை,

    தாங்கள் என் வலைப்பூவையும் தேர்ந்தெடுத்து எம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளீர்கள். நனி நன்றி. தங்கள் ஊக்கம் என்னை மேலும் உயரச் செய்யும். மிக்க மகிழ்ச்சி. அழகான அறிமுகங்கள்.அடுத்த ஆண்டும் இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள கட்டாயம் முயற்சிப்பேன்.

    பவளம் என்பது coral சங்கரி எங்கள் குடும்ப்ப்பெயர்.நன்றி .

    பதிலளிநீக்கு
  11. மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,
    மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,

    பதிலளிநீக்கு
  12. மகிழ்ச்சி ஏன் என்று கேட்க மாட்டீர்களா அப்பாதுரை?

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள அப்பாதுரை,
    நான் இன்னும் யுகபுருஷன் கதையைப் படிக்கவில்லை. ஆனால் தங்கள் கதை பரிசு பெற்றதில் என் மனம் இன்னும் நிலை கொள்ளாமல் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. இப்பரிசு எனக்குக் கிடைத்திருந்தால் ,,,,,, ........,,,,













    நிச்சயமாக இத்துணை இன்பம், மகிழ்ச்சி,கொண்டாட்டம், கோலாகலம், துள்ளல், குத்தாட்டம் எதூவும் இருந்திருக்காது. காரணம் பரிசு உரியவர்க்கு, தகுதியான ஒருவருக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. நானும் பத்மநாபன் சாரும் அடிக்கடி பேசியதுண்டு. உங்கள் கதையை எதாவது போட்டிகளுக்கோ அல்லது பத்திரிகைகளுக்கோ அனுப்ப வேண்டும் என்று.
    மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  14. முதல் முதல் நான் வாழ்த்து சொன்னதில் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். ரெகுலராகப் படிக்க முயற்கிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. அறிமுகங்கள் நன்று. இணையம் படுத்துகிறது. கணினியும்! புத்தாண்டு வாழ்த்துகள். வம்சி இரண்டாவது இடத்துக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  17. நல்ல அறிமுகங்கள்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. கௌசல்யா மேடம் ப்ளாக் லிங்க் தவறாக தரப்பட்டுள்ளது. சரி செய்யவும் நன்றி

    பதிலளிநீக்கு
  19. நன்றி கணேஷ், மோகன் குமார் (திருத்திவிட்டேன், good catch; என்னை 'மதித்து' எழுதியிருக்கும் இனிய கருத்துக்கு நன்றி), இராஜராஜேஸ்வரி, தமிழ் உதயம், RVS (உங்கூர்க்காரருன்னா சும்மாவா?), sasikala, சித்திரவீதிக்காரன், A.R.ராஜகோபாலன், ஹேமா, வல்லமை (coral=பவளம்..duh! தோணாமப் போயிடுச்சே! நெத்தியலடிச்சீங்க நித்திலம் :), ஆதிரா (எனக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி.. உங்க மகிழ்ச்சியைக் கண்டதும் இன்னும் கூத்தாடத் தோணுது.. உங்க அன்புக்கு நன்றி :), geetha santhanam, ஸ்ரீராம்., Rathnavel, ...

    பதிலளிநீக்கு
  20. முத்தாக எழுதவும் செய்து , முத்தான பத்து வலைப்பூக்களை வாசித்து பகிர்ந்து ...சென்ற வருட வலைப்பூ உலகத்தை சிறப்பு செய்து விட்டீர்கள் ... ஆதிராவின் குதூகலத்தில் இணைந்து கொண்டு பாராட்டி மகிழ்கிறேன் ...

    பதிலளிநீக்கு
  21. தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள
    பத்து வலைப்பூக்களும் முத்தான வலைப் பூக்களே
    நான் தொடர்ந்து ரசிக்கிற வலைப்பூக்களே
    தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் வித்யாசமாக இருக்கிறதே! மனதையாவது ஏதோ ஒரு வகையில் அமைதி படுத்திக்
    கொள்ள முடியும். அட்லீஸ்ட் தூங்கும் நேரமாவது அமைதி பெறுகிறது. அறிவு???? யாரவது விற்றால் வாங்கி கொள்ளலாம். :)
    நித்திலம், மனதோடு மட்டும் இந்த இரண்டும் ஏற்கெனவே அறிமுகமானவை. மற்றைய அறிமுகங்களுக்கு மிகவும் நன்றி. எல்லாவற்றையும் ஒரு ரவுண்டு வரவேண்டும். குறிப்பாக கிணற்று தவளை பாடல்களை எல்லாம் நிதானமாக கேட்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  23. Thankyou so much!

    kindly wait thamiz font new laptopla download seythuvittu ungkalaippaaraatta thamizotu varen
    regds
    shylaja

    பதிலளிநீக்கு
  24. வலைப்பூக்களை வாசிப்பதை மட்டுமின்றி இப்படி புத்தாண்டுப்பதிவில் அவைகளை சிலாகித்து பெருமைப்படுத்தும் உங்கள் நல்லமனம் வாழ்க! பத்தில் ஒன்றானதில் உற்சாகம் பற்றிக்கொள்கிறது மனம்! நன்றி மிக தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  25. அட வித்தியாசமான புத்தாண்டு உறுதிகள்பா..

    ஜாம்பவானால் அறிமுகப்படுத்தப்படும் வலைப்பூக்கள் எப்படி இருக்குமாம்?

    பெஸ்ட்.... பெஸ்ட்.. பெஸ்ட்....

    கண்டிப்பாக ஒவ்வொரு வலைப்பூவும் போய் பார்க்கிறேன்பா...

    இன்னும் உங்க கதைகள் படிக்க ஆரம்பிக்கலை...

    படிக்க ஆரம்பித்தால் அதில் மூழ்கிடுவேன் கண்டிப்பாக....

    ஜாம்பவானால் அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்....

    ஜாம்பவானுக்கும் ஜாம்பவான் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    யாருப்பா யாருப்பா அது ஜாம்பவான் ”அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பி திரும்பி கேட்காதீங்க...” அவதார்ல அந்தப்பக்கம் திரும்பி இருக்கீங்களே?

    நீங்க தான் :)

    பதிலளிநீக்கு
  26. சென்னையில் பதினாறு நாட்கள் இசைப் பயணம் முடித்து நான்கு ஜி பி இசைப் பதிவு செய்துகொண்டு, இரண்டாம் தேதி பெங்களூர் திரும்பினேன். சுவாரஸ்யமான வலைப்பூ அறிமுகங்களுக்கு நன்றி. மூன்றாம்சுழி வாசகர்கள், ஆசிரியர் எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. மிக்க நன்றி அப்பாதுரை :)

    என்னுடைய தளத்தையும் குறிப்பிட்டது மகிழ்ச்சி :)

    எழுதுவது வேறு, பிறரின் எழுத்தை சிலாகிக்கும் உங்கள் ரசனையும் மனதும் பாராட்டுதற்குறியது.

    புத்தாண்டில் என் பதிவு உங்கள் மனதில் இடம் பிடித்தது மகிழ்ச்சி. மற்ற வலைத்தளங்களையும் சென்று பார்க்க வேண்டும். மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. தங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன் . மிக்க நன்றி ஐயா அறிமுகம் செய்ததற்கு . இன்ன பிற தளங்களையும் தெரிந்து கொண்டேன் ,
    வாழ்த்துக்கள் .

    Thanks& regards
    Rajesh

    பதிலளிநீக்கு
  29. நீங்கள் அறிமுகப்படுத்திய தளங்களைத் தொடர ரொம்பவே ஆசைதான்; ஆனால் ஏற்கனவே இணையம் நிறைய நேரம் தின்னுகிறது. அதனால் வருத்தத்துடன்...

    பதிலளிநீக்கு
  30. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மநாபன், Ramani, meenakshi (அறிவுக்கடை என்று யாராவது திறந்தால் நன்றாக இருக்கும் என்று தான் நானும் நினைக்கிறேன். இருந்தாலும்...பிறந்த குழந்தைக்கு இல்லாத அறிவு இரண்டு வயதுக் குழந்தைக்கு இருக்கிறதே? எந்தக் கடையில் வாங்குகிறது? பத்து இருபது என்று வயது வளர அறிவும் வளருமா தெரியவில்லை.. ஆனால் நாற்பது வயதுக்கு மேல் தேய்வது போல் மட்டும் தெரிகிறது. சொந்த அனுபவம் :), ஷைலஜா, மஞ்சுபாஷிணி, kg gouthaman (அடுத்த இசைவிழாவுக்காவது சென்னை வரமுடியுமா பார்ப்போம்.. ஏதோ ஞானாம்பாள் கபே பத்தி சொன்னாங்க), Shakthiprabha, Narasimmarin Naalaayiram, ஹுஸைனம்மா, கீதா சாம்பசிவம் (இலவசத் திட்டங்கள் அறிவிச்சாச்சு.. இனிமே ஓட்டு மலையாக் குவியப் போகுது குடு குடு), ...

    பதிலளிநீக்கு
  31. பெரும்பாலும் நான் அறியாத வலைப்பூக்கள்
    அறிமுகத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  32. என்னுடைய தளத்தையும் குறிப்பிட்டதற்கு மிகுந்த நன்றிகள்.. சார்..தங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன்..பிற தளங்களையும் தெரிந்து கொண்டேன்..நன்றி..

    பதிலளிநீக்கு
  33. நன்றி ஐயா பல தேடல்களுக்கு விளைவு தரக் கூடிய தளங்களைத் தந்துள்ளீர்கள்...

    அது போல் அதிராக்காவுடன் நானும் கை கோர்த்துக் கொள்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  34. நன்றி சிவகுமாரன், யோவ், ♔ம.தி.சுதா♔, ...

    பதிலளிநீக்கு